பரிசுத்த வாழ்க்கை பரலோக வாழ்க்கை | Parisutha Valkai

பரிசுத்த வாழ்க்கை பரலோக வாழ்க்கை
ஆவி நிறைந்த வாழ்க்கை
இது துதி நிறைந்த வாழ்க்கை

ஆடுவோம் பாடுவோம்
ஆனந்தமாய் கூடுவோம்
ஆண்டவரை துதித்து
அல்லேலூயா பாடுவோம்

1. எனது பாவங்களை தானே சுமந்து தீர்த்தீர்
    வாய் திறவாத ஆட்டுக்குட்டி
    என்னை மீட்க பலியானார் - ஆடு

2.  மலைகள் விலகினாலும் 
    குன்றுகள் பெயர்ந்தாலும்
    உம்  கிருபை  என்னை சூழுந்து கொள்ளும்
    உமது இரக்கம் என்னை தாங்கும்  - ஆடு

3. ஆயிரம் பதினாயிரம்
    ஆயுதங்கள் எதிர்த்தாலும்
    ஆண்டவரே யுத்தம் செய்திடுவார்
    அருகில் நின்று களிகூருவேன்  - ஆடு

4. வாதை உன் கூடாரத்தை
    அணுகாமல் காத்திடுவார்
    அடைக்கல செட்டை விரித்திடுவார்
    வேலி அடைத்து காத்திடுவார்